திருபுவனம்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருபுவனம் மக்களுக்கான வலைப்பதிவு திருபுவனத்தை சார்ந்தவர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்

செய்திகள்

1.திகோ சில்க்ஸ் பெண்கள் மெட்ரிக் பள்ளி சாதனை
கும்பகோணம்: திருபுவனம் திகோ சில்க்ஸ் பெண்கள் மெட்ரிக் பள்ளி மாணவிகள் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 வகுப்பில் அதிக மார்க் பெற்று சாதனை படைத்துள்ளனர். கும்பகோணம் அருகே திருபுவனத்தில் திகோ சில்க்ஸ் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ப்ளஸ் 2 தேர்வில் ரீகானா என்ற மாணவி 1065 மார்க் பெற்று முதலிடமும், பெனாசிர்பேகம் 840 மார்க் பெற்று இரண்டாமிடமும், சுபா 779 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். 85 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் கீர்த்திகா 434 மார்க் பெற்று முதலிடமும், ரிஸ்வானா பர்வீன் 430 மார்க் பெற்று இரண்டாமிடமும், திவ்யபாரதி 395 மார்க் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர். எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் 83 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் பஞ்சநாதன், தலைமை ஆசிரியர் சுந்தரம் ஆசிரியர்கள் பாராட்டினர்.

2.திருபுவனம் அரசு பள்ளி மாணவிகள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் சாதனை
கும்பகோணம்: திருபுவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவிகள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் அதிக மார்க் பெற்று சாதனை படைத்துள்ளனர். கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு எஸ்.எஸ்.எல்.ஸி., அரசு பொதுத்தேர்வில் 118 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 117 பேர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 34 பேர் 400க்கு மேல் மார்க் பெற்றுள்ளனர். பள்ளி முதல் மாணவி சௌந்தர்யா 485 மார்க், இரண்டாம் மாணவி சிந்து 481 மார்க்கும், மூன்றாம் மாணவி தேவிகா 478 மார்க் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதிக மார்க் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜீவன் ஆகியோர் பாராட்டினர்
திருபுவனம் பேரூராட்சியில் ரூ.23 லட்சம் மதிப்புள்ள இலவச கியாஸ் அடுப்புகள் அமைச்சர் கோ.சி. மணி வழங்கினார்
திருபுவனம் பேரூராட்சி சார்பில் இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கும் விழா திருபுவனத்தில் நடைபெற்றது. திருவிடைமருதூர் ஒன்றியக் குழு தலைவர் செ.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர்கோ.சி.இளங்கோவன், திருபுவனம் தி.மு.க. செயலாளர் எஸ்.கே.பஞ்சநாதன், திருவிடைமருதூர் தலைமை பொதுக்குழு உறுப் பினர் சுந்தரசெயபால், திருபுவனம் பேரூராட்சி தலைவர் எஸ்.கே. மணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எஸ். கே.செல்வம், சோழன் பட்டு கூட்டுறவு சங்க மேலாளர் சிவலிங்கம், திருபுவனம் நகர காங்கிரஸ் தலைவர் நாராயண சாமி, திருநீலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முல்லைவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் கோ.சி. மணி பேசியதாவது:
முதல்அமைச்சர் கருணாநிதி கொடுத்த வாக்குறுதி களையும், கொடுக்காத வாக் குறுதிகளையும் நிறைவேற்றி வருவதை நாடறியும். அத் திட்டங்களில் ஒன்றுதான் இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கும் திட்டம். இதுவும் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து
பேரூராட்சிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.
திருபுவனம் பேரூராட்சியில் எரிவாயு இணைப்பு இல்லாத 2 ஆயிரத்து 222 குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படுகிறது. முதற் கட்டமாக 773 குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.23.19 லட்சம் ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை தொடர்ந்து பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகளை வழங்கி திட்டத்தை தொடங்கினார்.

திருபுவனம் அரசு பள்ளி
மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு
கல்வி அதிகாரி தொடங்கி வைத்தார்

திருவிடைமருதூர்,ஜூலை.21 திருபுவனம் அரசு பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்கான விழாவில் கல்வி அதிகாரி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். திருபுவனம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி அரசு அறிவித்தது. மேல்நிலைப்பள்ளி தொடக்கவிழா பள்ளிவளாகத்தில் நடைபெற்றது. முதன்மைக்கல்வி அலுவலர் குமார் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். மேல் நிலைபள்ளியாக தரம் உயர நன்கொடைகள் வழங்கியவர்களை திருவிடைமருதூர் ஒன்றியக்குழு தலைவர் செ.ராமலிங்கம் பாராட்டினார். விழாக்குழு பொறுப் பாளர் கருணாகடாட்சம் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் மணி, வர்த்தக சங்க தலைவர் உமாபதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜீவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திகோ சில்க்ஸ் முன் னாள் இயக்குனர்கள் அய்யன் சாமி, பஞ்சநாதன், திருபுவனம் சில்க் சிட்டி சங்க தலைவர் சேதுராமன், பேரூராட்சி துணைத்தலைவர் பாஸ்கர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முது நிலை மேலாளர் சுவாமிநாதன், மனித உரிமை பாதுகாப்பு இயக்க தலைவர் வெங்கட் ராமன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திபேசினர். டாக்டர் செல்வராஜ் மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.
திருபுவனம் பேரூராட்சி கூட்டம் 2வது முறையாக ஒத்திவைப்பு
தலைவரை கண்டித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு
திருவிடைமருதூர்,ஜூலை.21 திருபுவனம் பேரூராட்சி கூட்டத்தில் தலைவரைக் கண்டித்து கவுன்சிலர்கள் நேற்று வெளி நடப்பு செய்தனர். இதனால் 2&வது முறையாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.பேரூராட்சி கூட்டம் ஒத்திவைப்புதிருபுவனம் பேரூராட்சி 15 வார்டுகளைக்கொண்டது. இதன் தலைவராக எஸ்.கே. மணி (தி.மு.க) உள்ளார். இங்கு கடந்த சில மாதங்களாக தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக பேரூராட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்த பொருட்கள் நிறைவேற்றப்படாமல் 2 மாதங்களாக பேரூராட்சி கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. இங்கு கடந்த மாதம் 29ந் தேதி நடைபெறுவதாக இருந்த பேரூராட்சி கூட்டத்திலும் துணைத்தலைவர் பாஸ்கர் உள்பட பெரும்பான்மையான உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக் கணித்தனர். இதனால் அன்று நடைபெற வேண்டிய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.பின்னர் கடந்த மாத கூட்ட பொருட்களையும் சேர்த்து விவாதிப்பதற்காக நேற்று காலை கூட்டம் கூட்டப்பட் டது. இதில் தலைவர் மணி, நிர்வாக அதிகாரி சுரேஷ், துணைத்தலைவர் பாஸ்கர் மற்றும் அனைத்து உறுப்பி னர்கள் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியதும் துணைத்தலைவர் உள்பட 13 உறுப்பினர்கள் தலைவரை கண்டித்து வெளிநடப்பு செய் தனர். இதனால் கூட்டத்தில் எவ்வித தீர்மானமும் நிறை வேற்றப்படவில்லை. கூட்டம் 2&ம் முறையாக ஒத்திவைக் கப்பட்டது.பேரூராட்சி தலைவர் மணி கூறியதாவது:தன்னிச்சையாக செயல்படமுடியாது நான் பொறுப்பேற்றது முதல் இதுவரை எந்த ஒரு பணியையும் தீர்மானம் நிறைவேற்றாமல் செய்ததில்லை. இதில் ஏதும் தன் னிச்சையாக செயல்பட முடி யாது. வருவாய்துறை மூலமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்க உள்ளனர். இதனை கவுன்சிலர்கள் தங்கள் மூல மாக வார்டுகளுக்கு வழங்க வேண்டும். பேரூராட்சி மூலம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்கின்றனர்.வெள்ள நிவாரணம் வழங் கும்போது ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளால் திருபுவனத்தில் ஆங்காங்கே சாலை மறியல் நடைபெற்றது. இது திருபுவனத்தின் மீதிருந்த நல்லபெயருக்கே களங்கமாக அமைந்தது. இதனால் வருவாய்த்துறையினரே சமையல் எரிவாயு இணைப்பை வழங்கட்டும். நமக்கு அதுதான் நல்லது. மக்களுக்கு சரியானபடி சென்றடையும் என்று கவுன்சிலர்களிடம் கூறினேன். நிதி கோரப்பட்டுள்ளது அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு பிறகு பேரூராட்சிக்கு அரசிடமிருந்து ஏதும் நிதி வரவில்லை. வாரம் இருமுறை மாவட்ட கலெக்டரை சந்தித்து வருகிறேன். அண்ணா மறு மலர்ச்சி திட்டத்திற்கு பிறகு ரூ.28 லட்சத்திற்கு திட்டப்பணிகள் அனுப்பி தொடர்ந்து அரசிடமிருந்து நிதி கோரி வருகிறேன். எந்த பேரூராட்சிக்கும் இன்னும் நிதி வர வில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார். இதுபற்றி பேரூராட்சி துணைத்தலைவர் பாஸ்கர் கூறியதாவது: திருபுவனம் பேரூராட்சியில் செய்ய வேண்டிய அனைத்து பணிகள் குறித்தும் கணக்கெடுத்து ஒப்படைக்கப்பட் டுள்ளது. கடந்த 3 ஆண்டு களாக எந்த பணிகளும் செய்து முடிக்கவில்லை. அரசிடமிருந்து எந்த நிதியும் கேட்டுப்பெறவில்லை. கவுன்சிலர்கள் கேட்கும் பொதுமக்கள் குறித்த கேள்விகளுக்கு தலைவர் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை.இந்த போக்கு தொடர்ந்து நீடித்து வருவதால் கடந்த மாத கூட்டத்தை புறக்கணித்தோம். இன்றைய கூட்டத்திலும்(நேற்று) ஒட்டு மொத்த உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளோம். இதே நிலை தொடருமானால் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.அவருடன் உறுப்பினர்கள் இருந்தனர்.

குடந்தை அருகே ஆட்டோ மீது வேன் மோதி சிறுமி சாவு
கும்பகோணம், ஜூலை 19: கும்பகோணம் அருகே ஆட்டோ மீது வேன் மோதியதில் அதில் பயணம் செய்த 10 வயது சிறுமி உயிரிழந்தார்.
லால்குடியைச் சேர்ந்த அப்பாஸ் மனைவி பர்வீன் (30), பெனாசீர் (20), அப்பாஸின் மகள் அப்ரின் (10), பிராஸ் (4) ஆகியோர் திருபுவனத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவில் கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
ஐந்துதலைப்பு வாய்க்கால் அருகே வந்த போது, எதிரே சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஆட்டோ மீது மோதியது.
இதில் சிறுமி அப்ரின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் பலத்த காயங்களுடன் குடந்தை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து திருவிடைமருதூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.












கும்பகோணம் அருகே திருபுவனம் சன்னதிதெருவில் திருபுவனம் பட்டு நெசவா ளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைமையகம் உள்ளது. இங்கு நேற்று வந்த அமைச்சர் ராமச்சந்திரன் விற்பனையகம், மற்றும் பட்டு சேலை வரவு& செலவு செய்யப்படும் இடம், சேலைகள் இருப்பு வைக் கப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டார்.மேலும் சேலைகளின் தரம் மற்றும் விலை விவரங்களையும் பார்வையிட்ட அவர், விற்பனை யாகும் விவரங்களையும் கேட் டறிந்தார்.பின்னர் அமைச்சர் ராமச் சந்திரனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:&நெசவாளர்களுக்கு நிவாரணம்கேள்வி:&மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்களுக்கு நிவாரணம் எப்போது வழங்கப்படும்?பதில்:&நிவாரணம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை சங்கங்கள் அனுப்பி உள்ளன. அது முதல்வரின் கருத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அறிவிக்கப்படும்.கே:& கோ&ஆப்டெக்ஸ் நிறு வனங்களில் துணிகள் கட னுக்கு வழங்கப்பட்டு அது வசூலாகவில்லை என்றால் ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படுவதாக கூறப் படுகிறதே?பதில்: &அரசாங்க பணத்திற்கு முழுப்பொறுப்பு ஊழியர்கள் தான். அதனை முறையாக வசூல் செய்யவேண்டியது அவர்கள் தான்.இலக்கு கிடையாதுகே:& கட்டாய விற்பனை இலக்கு நிர்ணயிப்பதாக கூறப்படுகிறதே?பதில்:& ஊழியர்களிடம் கட்டாய விற்பனை இலக்கு நிர்ணயிக்கவில்லை. மேலும் கோ&ஆப்டெக்ஸ் நிறுவ னத்தில் தற்போது புதிய அணுகுமுறையை ஏற்படுத்தும் விதமாக புதிய டிசைன்களில் நடுத்தர மக்களும் விரும்பி வந்து வாங்கும் அளவுக்கு தரமான துணிகள் தயாரிக்கப்படுகின்றன. அனைத்து மக்களும் கோ&ஆப் டெக்சை தேடி வரும் அளவுக்கு புதுமை வடிவங்கள் புகுத் தப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார். கோரிக்கை மனுஅமைச்சரிடம், திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்க நெசவுத்தொழிலாளர்கள் சங்கம் சார்பில், சோழன் பட்டு சொசைட்டியில் ஆண்டு தணிக்கை நடத்தாமலும், போனஸ், டிவிடெண்ட் வழங் கப்படாமலும், 6 மாத மாக பட்டு, பாவு, ஜரிகை போன்றவை வழங்கப் படா மலும் இருப்பதால் சங்க உறுப்பினர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் அதுகுறித்து தனி அலுவலர் மதியழகனிடம் விசாரித்தார். ஆடிட்டர்கள் குறைவாக உள்ளதால் ஆண்டுக்கணக்கு பார்க்க தாமதமாகி உள்ளது. மேலும் கடந்த 15 நாட்களாக மழை பெய்ததால் வியாபாரம் சரிவர இல்லை. தற்போது ஜரிகை வாங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது என்று தனி அலுவலர் மதியழகன் தெரிவித்தார்.ரூ.5 கோடி விற்பனை இலக்குகடந்த ஆண்டு விற்பனை எவ்வளவு என்றும், இந்த ஆண்டு இலக்கு எவ்வளவு என்றும் அமைச்சர் ராமச் சந்திரன் கேட்டபோது, அதற்கு கடந்த ஆண்டு ரூ.4Ñ கோடி என்றும், இந்த ஆண்டு ரூ.5 கோடி இலக்கு என்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.அமைச்சருடன் திருவி டைமருதூர் ஒன்றியக்குழு தலைவர் செ. ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் அன் பழகன், திகோ சில்க்ஸ் பள்ளி தாளாளர் பஞ்சநாதன், பொதுக்குழு உறுப்பினர் சுந்தரஜெயபால், பேரூராட்சி தலைவர் மணி, மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப் பாளர் நீலமேகம், ஒன்றிய இளைஞரணி அமைப் பாளர் செல்வம், ஒன்றிய கவுன்சிலர் கிருட்டிணராஜ், ஊராட்சி தலைவர் முல்லைவேந்தன் மற்றும் உதவி இயக்குனர் முகமதுமசூது, திகோசில்க்ஸ் தனி அலுவலர் கந்தசாமி, சோழன்பட்டு தனி அலுவலர் மதியழகன், கைத்தறி அலு வலர் ராஜேந்திரன், குழந் தைராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.








திருபுவனம் பட்டில் புதிய வடிவமைப்புகள் அறிமுகம் கூ.சங்க இணை இயக்குனர் பிரகாசம் தகவல்

கும்பகோணம்: ""கும்பகோணம் அருகே திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் புதிய வடிவமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன,'' என்று கூட்டுறவு சங்க இணை இயக்குனர் பிரகாசம் கூறினார்.

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் மத்திய அரசின் விருது பெற்ற திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் உள்ளது. இதன் இணை இயக்குனர் பிரகாசம் நிருபர்களிடம் கூறியதாவது:

பெருமை மிகுந்த கோயில்களுக்கு மட்டுமல்லாமல், கலைநயம் மிகுந்த அழகு மிளிர்கொண்ட வண்ணங்களை கொண்ட தாராளமான பட்டு சேலைகள் உற்பத்திக்கும் பெயர் பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தால் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்படும் சேலைகளுக்கு தனித்தரம் உண்டு. திருபுவனம் பட்டு நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆயிரத்து
800 உறுப்பினர்கள்,
110 பணியாளர்கள் என வளர்ந்து வந்துள்ளது. ஆண்டு ஒன்றுக்கு
ரூ.
30 கோடிக்கும் அதிகமாக பட்டுசேலைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிறுவனம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ளது. 1977ம் ஆண்டு சிறந்த பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கான தேசிய விருதை இந்திய அரசிடம் இருந்தும்,
1992ம் ஆண்டு வனசிங்காரம் என்ற வடிவமைப்பு மூலம் சிறந்த சேலை வடிவமைப்பிற்கான விருதையும் மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது. முன்னாள் ரஷ்ய அதிபர் பிரஷ்னேவ், பிரிட்டன் மகாராணி எலிசபெத் வரவேற்புக்கு பட்டினாலான பொன்னாடை இச்சங்க உறுப்பினர்களால் நெசவு நெய்யப்பட்டுள்ளது. ஜரிகை எடையில்
53 முதல்
57 சதம் வரை வெள்ளியும்,
0.6 சதம் தங்கமும் கொண்டதாகவும் உள்ளது. பட்டுசேலை ஒன்றின் எடை 500 கிராம் முதல் ஆயிரத்து
250 கிராம் வரை உள்ளது. இதில்,
475 கிராம் பட்டும், மீதமுள்ளது ஜரிகையின் எடையாகும். ரூ.
19 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ள ஜரிகை பகுப்பாய்வு எந்திரத்தில் வாங்கும் சேலையின் தரத்தை பரிசோதித்துக் கொள்ளலாம். சாயமேற்றப்பட்ட பட்டு நுõல் மற்றும் ஜரிகை சங்கத்தின் நெசவு செய்யும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு, சங்கத்தின் தறி கண்காணிப்பாளர்களின் கண்காணிப்பின் கீழ் சேலைகள் நெசவு செய்யப்படுகிறது. மக்கள் மத்தியில் சேலைகளின் எடையை பொறுத்தே அதனுடைய வலு இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், உண்மையில் நெசவு செய்ய உபயோகப்படுத்தும் பட்டு நுõலின் வலு மற்றும் அடர்த்தியின் அடிப்படையிலேயே வலு மற்றும் உழைப்பு உள்ளது. திருபுவனம் பட்டு ரக சேலைகள் உடுத்திக்கொள்வதற்கு அழகாகவும், உறுத்தாமலும் இருக்கும். சேலைகளுக்கு வெளிப்படையான முறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பட்டு கூட்டுறவு சங்கங்களில் தரச்சான்று பெற்ற ஒரே நிறுவனமாக திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது. வாடிக்கையாளர்கள் ரசனைக்கேற்ற வண்ணம், புதிய புதிய வடிவமைப்புகளில் சேலைகளை உருவாக்குவதற்கென்று ஒன்பது நபர்களைக் கொண்ட வடிவமைப்பு கமிட்டி ஒன்று சங்கத்தில் செயல்படுகிறது. தற்போது பொங்கல்
2008 மற்றும் தை மாத முகூர்த்தத்தை முன்னிட்டு பல வண்ணங்களிலும், காண்ட்ராஸ்டு கலர்களிலும்
250 புதிய டிசைன்களில் பட்டு சேலைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். இவற்றுள் ரூ.மூன்று ஆயிரத்து
500க்குள்
45 புதிய டிசைன்களிலும், ஐந்தாயிரம் முதல் ஏழு ஆயிரம் வரையிலான விலையில்
60 புதிய டிசைன்களும், ரூ.ஏழாயிரம் முதல் ரூ.
12 ஆயிரம் வரையிலான விலையில்
65 புதிய டிசைன்களிலும், ரூ.
20 ஆயிரத்துக்கு மேல் உள்ள விலையில்
30 டிசைன்களும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் ரூ.ஏழாயிரம் முதல் ரூ.
12 ஆயிரம் வரையிலான விலையில் அறிமுகம் செய்துள்ள காலேஜ் கலெக்ஷன்ஸ் என்னும் ரகப்புடவைகள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வியாபாரம் மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு தரம் மற்றும் சரியான விலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சேலைகள் உற்பத்தி செய்யப்படும்போது, அதை வரவேற்க வாடிக்கையாளர்கள் தயாராக உள்ளனர். நடப்பு ஆண்டில் உற்பத்தி மற்றும் விற்பனை குறியீடாக ரூ.
33 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, சங்கத்தின் முதன்மை கணக்காளரும், கைத்தறி அலுவலருமான குழந்தைராசு உடனிருந்தார்.

பட்டுப்புடவை ஜரிகை தரம் அறியும் கருவி நிமிடத்தில் வாடிக்கையாளர் அறியமுடியும்
கும்பகோணம்: திருபுவனம் பட்டு சொசைட்டியில் ரூ.19 லட்சம் மதிப்பில் பட்டுப் புடவையில் உள்ள ஜரிகை தரம் அறியும் கருவி அமைக்கப்பட்டுள்ளதாக தனி அலுவலர் கந்தசாமி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அனைத்து மகளிரும் விரும்பும் பட்டுப்புடவைகள் சிறப்பான முறையில் தயாரிப்பதில் இந்தியாவிலேயே சிறந்த கூட்டுறவு சொசைட்டியாக திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் திகழ்கிறது. பட்டுப்புடவைகள் அதிலுள்ள ஜரிகையின் தரத்தினை கொண்டு அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. திருமணம் போன்ற வைபவங்களுக்கு மிகவும் அதிக விலையுள்ள பட்டுப்புடவைகளை பெண்கள் விரும்புகின்றனர். ஏனெனில் அதில் ஜரிகை வேலைகள் அதிகம் இடம்பெற்றிருக்கும். அதிக விலை கொடுத்து வாங்கும் பட்டுப்புடவைகளில் உள்ள ஜரிகையின் தரத்தை அறிவது அனைவருக்கும் அவசியமாகிறது. தனியார் நிறுவனங்கள் ஜரிகை விஷயத்தில் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது தவிர்க்கப்பட ரூ.19 லட்சம் மதிப்பிலான ஜரிகை தரம் அறியும் கருவி திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதுபோல் தமிழ்நாட்டில் சேலம், காஞ்சிபுரம் போன்ற ஊர்களில் இக்கருவி தமிழக அரசால் வைக்கப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் பட்டுப்புடவைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சேலையில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியின் தரத்தினை கம்ப்யூட்டர் மூலம் கண்டறியும் விதத்தில் அமைந்து உள்ளது. ஜரிகையின் தரம் ஒரு நிமிடத்தில் வாடிக்கையாளரே தெரிந்துகொள்ளலாம். இதனால் தாங்கள் செலவிட்ட பணத்துக்கு தரமான பட்டுச்சேலை வாங்கியுள்ளோம் என்ற திருப்தி ஏற்படும். வெளி இடங்களில் வாங்கும் புடவைகளையும் இங்கு சோதித்து பார்க்கலாம். இதன் மூலம் அசல், போலி ஜரிகைகள் தெரிந்துவிடும். இதை மக்களும் வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு சங்க தனி அலுவலர் கந்தசாமி தெரிவித்தார். கைத்தறி அலுவலர் குழந்தைராஜ் உடனிருந்தார். ஆயிரம் இசை நிகழ்ச்சி நடத்தி சாதனை திருபுவனம் ஆத்மநாதனுக்கு விருது வழங்கல் தஞ்சாவூர்: ஆயிரம் இசை நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்திய திருபுவனம் ஜி.ஆத்மநாதனுக்கு திருவையாறு ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி விழாவில் விருது வழங்கப்படுகிறது. சங்கீதபூஷணம் போழக்குடி பி.வி.கணேசய்யரிடம் முறைப்படி இசை பயின்று 1978ல் திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் தலைமையில் இசை அரங்கேற்றம் செய்யப்பட்டவர் திருபுவனம் ஜி.ஆத்மநாதன். இவர் ஆயிரம் இசை நிகழ்ச்சிகள் வரை நடத்தி உள்ளார். இவர் தன் இசைத்திறமையை வளர்த்துக் கொள்ள இசை அரசி தஞ்சாவூர் வி.பிரேமா, தஞ்சாவூர் ஆர்.உதயசங்கர் ஜோஷி, வயலின் சக்கரவர்த்தி ஸ்ரீகுன்னக்குடி வைத்தியநாதன் ஆகியோருடன் இசை பயின்றுள்ளார். 1986ல் இந்திரா பார்த்தசாரதியின் நந்தன் கதையில் ராஜூ டைரக்ஷனில் நந்தனாக (நந்தனார்) பாடிக் கொண்டு நடத்து சங்கீத நாடக அகாடெமியின் விருது பெற்றுள்ளார். சமீபத்தில் இவருடைய இசை நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன், கெனடிகட் ஆகிய இடங்களிலும் இவர் நடித்த நந்தன் கதை நாடகம் டாக்டர் மு.இராமசாமி டைரக்ஷனில், நியூஜெர்ஸி, சிக்காகோ, ஸெயின் லுõசி ஆகிய இடங்களில் நடந்தது. ஸெயின் லுõசியில் இந்திரா பார்த்தசாரதி புதல்வர் இவரை பாராட்டியதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கும் இவர் பல மாணவ, மாணவிகளை உருவாக்கி உள்ளார். தமிழிசை பாடல்களை அதிகம் பாடி வரும் இவர், தற்போது தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாரப்பர் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு ஃபிப்., 15, 16ம் தேதி நடக்கும் ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்கிறார். இவ்விழாவில் இருபது சிறந்த இசைக்கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இதில் திருபுவனம் கு.ஆத்மநாதனுக்கும் விருது வழங்கப்படுகிறது.

புதிய பகுதி


இங்குஅழுத்துங்கள்

திருபுவனம் பேரூராட்சி

திருபுவனம் பேரூராட்சியில் 1வது வார்டு சுயேட்சை வரலட்சுமி 192 ஓட்டு, 2வது வார்டு காங்கிரஸ் ருக்மணி 264, 3வது வார்டு சுயேட்சை குலாம் ரசூல் 111, 4வது வார்டு சுயேட்சை ராஜா 264, 5வது வார்டு தி.மு.க., மணி 211, 6வது வார்டு காங்கிரஸ் காமராஜ் 212, 7வது வார்டு தி.மு.க., மைதிலி 303, 8வது வார்டு தி.மு.க., தேசிகன் 169, 9வது வார்டு அ.தி.மு.க., ராஜசேகரன் 223, 10வது வார்டு சுயேட்சை சேதுராமன் 144, 11வது வார்டு ம.தி.மு.க., ஜெகதீஸ்வரி 253, 12வது வார்டு சுயேட்சை சாரதாம்பாள் 228, 13வது வார்டு சுயேட்சை குருமூர்த்தி 190, 14வது வார்டு காங்கிரஸ் கனகன் 323, 15வது வார்டு காங்கிரஸ் பாஸ்கர் 190 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றனர்.
நகர தி.மு.க. செயலாளர் ஆச்சி என்கிற திரு எஸ்.கே.பஞ்சநாதன் தம்பியும், திருவள்ளுவர் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான 5வது வார்டு திரு எஸ்.கே.மணி
பேரூராட்சி தலைவராகவும், 15வது வார்டு காங்கிரஸ் திரு பாஸ்கர் பேரூராட்சி துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அயல்நாடுகளில் நமது ஊரார்

குவைத்
பெரியபள்ளிவாசல்தெரு
எம். ஜபருல்லா +965-97225596
எம். அப்துல் சலாம்
எம்.லியாக்கத்அலி
எம். முஹம்மது ஜூபைர்
வடக்குமுஸ்லிம்தெரு
ஹெச். சிராஜுதீன்
ஹெச். முசாவுதீன்
எம். உபைத்துர்ரஹ்மான்
எம். முஹம்மது மைதீன் +965-99512943
ஹெச். முஹம்மது மைதீன்
கண்டக்காரத்தெரு
எம். தாஜுதீன் +965-66213340
ஏ.கே.அன்சாரி
எம். அஷ்ரப்அலி
ஹிஜ்ரத்நகர்
ஏ.கே.எம். ஜாஹிர்ஹூஸைன்
புதுமுஸ்லிம்தெரு
ஏ.எம்.சேக்அலாவுதீன்
வடக்குவீதி
எம்.முஹம்மது இக்பால் +965-97499107
குவைத்நகர்
ஏ.எம்.முஹம்மது சலீம்
முஹம்மதுஅலி
எம்.முஹம்மது சலீம்
அமீரகம்
பெரியபள்ளிவாசல்தெரு
சுல்தானுல்ஆரிப் +971505465796
முஹம்மது பாசித் +971502474161
அப்துல்ஜலீல் +971558014468
ஏ.ஜபருல்லா
பத்ருல்ஜமான்
மன்சூர்அலி
ஏ.எம்.ஹாஜாமைதீன் +97125831529
ஏ.எம்.முஹம்மதுஅலி +971508208447
ஏ.சவுக்கத்அலி
எம்.அஜ்மல்சாதிக் +971506523260
அப்துல்ரஹிம்சேட் +971507241530
முஹம்மதுஅலி
சேக்அலாவுதீன் +971504355100
இமாம்அலி +971508664834
ஹாஜிமுஹம்மது +971503539275
முஹம்மதுஅபுசாலி +971507751220
முஹம்மதுயஹ்யா
மிஸ்கீன்சேக்அலாவுதீன்
நிசார்அஹமது +971554922798
அல்லாபக்ஷ் +971507926728
யாஸிர்அலி
சர்வமான்யதெரு
ஏ.யாஸர்அஹமது
ஏ.தஸ்லிம்அஹமது +971503734253
ஹிஜ்ரத்நகர்
எம்.நசீர்அஹமது +971503158189
எம்.ஷேக்கலீபா +971505805303
அப்துல்மஜீது முஹம்மது +971502878224
ஏ.சர்புதீன்
ஏ.ஹூதருதீன் +971507052262
ஏ.ரியாசுதீன்
எம்.முபாரக்அலி +97126265505
ஹாஜாமைதீன் சத்தார்
ஏ. முஹம்மது அலியாஸ் +971501607920
ஏ.தம்ஜீல்அஹமது +971506798430
கண்டக்காரத்தெரு
ஏ.அய்னுதீன்
எம்.சமீருதீன் +971502807550
முஹம்மது ஜூபைர்
எம்.முஹம்மது ஜான் +971505054671
ஹலீலுர்ரஹ்மான்
வடக்குமுஸ்லிம்தெரு
முஹம்மதுயூசுப்
செய்யதுஅஹமது
முஹம்மது ஜூபைர்
ஏ.நவ்சாத்அலி +971501323841
ஏ. சிராஜுதீன் +971501612747
ஏ.சாகுல்ஹமீது +971505927224
செட்டி ஜெஹபர்அலி
சேட்எம். சாதிக்அலி
எம்.ஜாஸிம்அலி +971506782630
சேக்அலாவுதீன்
இமாம்அலி
நடுமுஸ்லிம்தெரு
எம்.ஹாஜாமைதீன்
எம்.முஜிபுர்ரஹ்மான் +971505304502
ஹலீலுர்ரஹ்மான்
ஹாஜாமைதீன்
முஹம்மதுஅலி
சாதிக்பாட்சா
முஹம்மது இலியாஸ்
எம்.அமானுல்லா
எம்.முஹம்மதுரபீக்
எம்.அஹமது
ஜெஹபர்அலிகோம்பை
ஏ.ஜெஹபர்அலி காதர்ஷா +971507946246
புதுமுஸ்லிம்தெரு
ஏ.ஹிபாயத்துல்லா +971504733595
ஏ.அக்பர் அலி +971506763609
ஏ.அன்வர்பாட்சா +971507827100
இஸ்மாயில் +971502935400
ஏ.அப்துல்ரஜாக் +971507821389
ஏ.ஜஹபர்சாதிக் +971507701247
ஏ.தஸ்லிம் +971509593858
ஜாஹிர்ஹூஸைன்
ஏ.கமால்பாட்சா
எம்.சாதிக்பாட்சா
எம்.சலீம்பாட்சா +971507628729
சாகுல்ஹமீது +971507319848
இஸ்மாயில் +971507421561
அக்பர் அலி +971557678920
ஆர்.முஹம்மதுசாலி +971559520568
ஆர்.முஹம்மது மாலி
ஜே.ஷாஜஹான் ருகையா
ஜே.ஆசாத் ருகையா +971556139095
கீழசாலை
எம்.நூர்தீன் +971502566599
ஏ.சாதிக்பாட்சா
எம்.லியாக்கத்அலி +97150952302
எம்.பக்கீர்முஹம்மது மம்மு +971505880265
எம்.குலாம்முஹம்மது +971501241259
எம்.பக்கீர்முஹம்மது
ராஜா அக்பர் அலி +971557530131
முஹம்மதுரபீக் +971507791292
நிசார்அஹமது +971508729825
முஹம்மதுபாரூக் +971504767135
ஏ.முஹம்மதுபாரூக்
ஹாஜிமுஹம்மது
ஹாஜா அலாவுதீன்
முஹம்மது இலியாஸ் +971505017174
வடக்குவீதி
இப்ராஹிம்
ஜெஹபர்அலிவைத்தி
ஜெஹபர்அலி
எம்.ஜஹாங்கீர்பாட்சா
எம்.முஹம்மதுசுகர்னோ
எம்.அஹமதுபாட்சா
வண்டிக்காரத்தெரு
ஏ.ஹமீதுசுல்தான்
அப்துல்மாலிக்
ஜவஹர்அலி
கீழவீதி
பக்கீர்முஹம்மது +971504431829
ஹஜ்ஜிமுஹம்மது +971505728248
தெற்குவீதி
எம்.பத்ருல்ஜமான் +971505401619
பி.பைசல்அஹமது +971502869200
ஏ.முஹம்மதுமுஸ்தபா +971502553184
ஏ.செய்யது முஹமது +971557353062
ஹாஜாமைதீன்
ஜாஹிர்ஹூஸைன்
செட்டி அமானுல்லா
மேலவீதி ஹாஜாமாலிக்
கடைவீதி ராம்குமார் +971508854141
பாரூக்நகர் மன்சூர்அலி
மருத்துவர்தெரு
இராமச்சந்திரன் பத்தர் +971553481909
கண்ணன் +971502565835

ஊர் வரலாறு

திருபுவனம் (ஆங்கிலம்:Thirubuvanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
பொருளடக்கம்
1 மக்கள் தொகை
2 ஊர் நிர்மாணம்
3 ஆலயஅமைப்பு
4 சௌராட்டிரர்
5 பிறசமூக மக்கள்
6 வழிபாட்டுதலங்கள்
7 பள்ளிகள்
8 திகோ சில்க்ஸ்
9 ஆதாரங்கள்
மக்கள் தொகை
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,139 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருபுவனம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருபுவனம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஊர் நிர்மாணம்
சோழர்களில் கடைசிப் பேரரசர் மூன்றாம் குலோத்துங்க சோழன் தனக்கு மூவுலக சக்கரவர்த்தி எனப்பொருள்படும் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டத்தை சூடிக்கொண்டான்.அவன் தனது பெயரில் கும்பகோணத்திற்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் ஒரு ஊரை நிர்மாணித்தான்.அது தான் திருபுவனம்.இந்த ஊருக்கு திருபுவனம் எனப் பெயர் சூட்டப்படுவதற்கு முன்பே இராசேந்திரச் சோழன் இங்கு இரு கல்லூரிகளை அமைத்துள்ளான்.
ஆலயஅமைப்பு
இங்கு சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு) ஆலயமும் அவன் நிர்மாணித்தான்.உலகிலேயே இங்கு தான் சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு) பிரேத்தியகமான ஆலயம் உள்ளது. சோழர் காலக் கட்டிடக்கலைக்கு உதாரணமாக இவ்வாலயத்தையும்,தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தையும், தாராசுரம் ஐராவதீஸ்வரர்ஆலயத்தையும், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தையுமே குறிப்பிடுகிறார்கள்.
சௌராட்டிரர்
இங்கு காந்தியடிகள் பிறந்த கத்தியவார் என்றழைக்கப்படும் சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்த நெசவாளர்கள் பெருமளவில் குடியமர்ந்தனர். இவர்களின் வழிப்பாட்டிற்காக ஒரு பெருமாள் கோவில் கட்டினர்.அதுதான் கோதண்டராமஸ்வாமி ஆலயமாகும். தமிழகத்திலேயே சௌராஷ்டிரா சமூக மக்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரே ஆலயமாகும்.
சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்த சிறீமன் நடனகோபால நாயகி சுவாமிகளால் அமைக்கப்பட்ட நாலாயிரம் திவ்விய பிரபந்த பஜனை மடமும்,விராலிமலை சதாசிவ சுவாமிகளின் கிளை மடமும், பாண்டுரங்க பஜனை மடமும் உள்ளது. சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமான பத்மபிரகலதா நாடகசபை உள்ளது. இதன் சார்பில் ஆண்டுதோறும் பத்மபிரகலதா தொடர்நாடகம் நடத்தப்படுகிறது. சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமாக ஒரு உடற்பயிற்சி நிலையம் உள்ளது இதன் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.
பிறசமூக மக்கள்
சௌராஷ்டிரா சமூகத்தினருடன் இஸ்லாமியர், வன்னியர்,ஆதிதிராவிடர், செங்குந்தர்முதலியார், நாயுடு, பிள்ளைமார், இசைவேளாளர், யாதவர், பிராமணர், மருத்துவர், விசுவகர்மா, செட்டியார் ஆகிய சமூக மக்களும் வசித்து வருகின்றனர்.
வழிபாட்டுதலங்கள்
இங்கு பெரிய பள்ளிவாசல், புதுமுஸ்லிம்தெரு பள்ளிவாசல் ஆகிய இரு ஜூம்ஆ பள்ளிவாசல்கள் தனித்தனி ஜமாத்தாக இயங்கி வருகின்றன. மேலும் பிள்ளையார், காளியம்மன், மாரியம்மன், ஆஞ்சநேயர், அய்யனார், திரௌபதிஅம்மன், பிடாரியம்மன், போன்ற சிறு தெய்வ கோவில்கள் ஆங்காங்கு உள்ளன.
பள்ளிகள்
மூன்று தொடக்கப்பள்ளிகளும், ஒரு அரசினர் உயர்நிலைப் பள்ளியும் திகோ சில்க்ஸ் பெண்கள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியும், திகோ சில்க்ஸ் ஆண்கள் மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளியும்,சௌராஷ்டிரா மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளியும், இந்தியன் நர்சரி பிரைமரி பள்ளியும் உள்ளன.
திகோ சில்க்ஸ்
இங்கு நெசவாளர்கள் கணிசமாக வசிக்கின்ற காரணத்தால் பட்டு நெசவுத் தொழில் சிறப்புற்று விளங்குகிறது. பல கூட்டுறவு சங்கங்கள் அமைத்து அரசு பட்டுச்சேலைகளை உற்பத்தி செய்து சங்கத்தின் மூலமே விற்பனை செய்து வருகிறது. இங்கு உள்ள திகோ சில்க்ஸ் என்றழைக்கப்படும் திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கம் தான் இந்தியாவிலேயே அதிக விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கமாகும். இந்த ஆண்டு மட்டும் முப்பத்தி மூன்று கோடி ரூபாய் விற்பனை செய்துள்ளது.[2]
ஆதாரங்கள்
"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
http://www.thehindu.com/2008/01/12/stories/2008011255010500.htm